பாலமேடு ரணகாளியம்மன் கோயில் உற்ஸவ விழா
ADDED :1 days ago
பாலமேடு: ராமகவுண்டன்பட்டியில் ரணகாளியம்மன் கோயில் உற்ஸவ விழா மே 12ல் சாமி சாட்டுதல், பக்தர்கள் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. மே 15 கொடிமரம் நடுதல், 19ல் நையாண்டி மேளம், மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜை, மஞ்சமலை சுவாமி அணைக்கரை சுவாமிக்கு கனி நிகழ்ச்சியை தொடர்ந்து கருப்புசாமி அழைப்பு, அம்மனுக்கு சக்தி கரகம் எடுத்து வருதல், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று காலை 4:00 மணிக்கு மாவிளக்கு எடுத்தல், முளைப்பாரி, பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மாலை அம்மன் பூஞ்சோலை சென்றடைந்தார்.