உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காலேஸ்வர முக்தேஸ்வர சுவாமி கோவிலில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்கு ஆசி

காலேஸ்வர முக்தேஸ்வர சுவாமி கோவிலில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்கு ஆசி

தெலுங்கானா, தெலுங்கானா, காளேஸ்வரத்தில் உள்ள சரஸ்வதி புஷ்கரத்தில் பூஜ்ய சங்கராச்சாரியார் சுவாமிஜி சங்கல்பம், ஸ்நானம் மற்றும் அனுஷ்டானத்திற்குப் பிறகு சரஸ்வதி நதிக்கு ஆரத்தி செய்தும், நட்சத்திர மாலா ஸ்லோகம் மற்றும் பிற ஸ்தோத்திரங்கள் பாரயணம் செய்து வழிபட்டார்.


தொடர்ந்து, ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் தெலுங்கானா ஸ்ரீ காலேஸ்வர முக்தேஸ்வர சுவாமி தேவஸ்தானத்திற்கு விஜயம் செய்தார். அவரை அமைச்சர்கள், முதன்மை செயலாளர் மற்றும் செயல் அலுவலர், ஆட்சியர் மற்றும் மாவட்ட நீதிபதிகள் பூர்ணகும்ப ஸ்வாகதம் செய்து வரவேற்றனர். பரமேஸ்வரர் மற்றும் அம்பாளுக்கு அபிஷேகம், அர்ச்சனை, ஹாரதி செய்து சங்கராச்சாரியார் சுவாமிகள் வழிபட்டார். கோவில் யாகசாலையில் பூர்ணாஹுதி நடந்தது. ஸ்ரீமடம் ஸ்வஸ்தி வசனம் மற்றும் பிரசாதங்கள் சுவாமிகளுக்கு வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து,  பூஜ்ய ஸ்ரீசங்கராச்சாரியார் ஸ்வாமிகள் அனுகிரஹ பாஷணம் மூலம் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !