உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரசூரில் சித்திரை தேர் திருவிழா; திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்

அரசூரில் சித்திரை தேர் திருவிழா; திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்

சித்தாமூர்: அரசூர் கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் மற்றும் முத்துமாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா நேற்று முன்தினம் விமரிசையாக நடந்தது.


சூணாம்பேடு அடுத்த அரசூர் கிராமத்தில் பொன்னியம்மன் மற்றும் முத்துமாரியம்மன் கோவில்கள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர் உத்சவம் விமரிசையாக நடப்பது வழக்கம். அதேபோல் இந்தாண்டு 66வது தேர் திருவிழாவை விமரிசையாக நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். கடந்த 14ம் தேதி யாகசாலை பூஜையுடன் திருவிழா தொடங்கி, 15ம் தேதி, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், மாலையில் அம்மனுக்கு ஊரணி பொங்கல் மற்றும் இரவு அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நடந்தது. கடந்த 19ம் தேதி அம்மனுக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சியும், 20ம் தேதி பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்வாக பொன்னியம்மன் மற்றும் முத்துமாரியம்மன் தேர் திருவிழா நேற்று முன்தினம் விமரிசையாக நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவிலில் இருந்து தேர் புறப்பட்டு கிராம முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் மாலை 5:00 மணியளவில் நிலையை வந்தடைந்தது. விழா ஏற்பாடுகளை அரசூர் கிராம மக்கள் செய்தனர். இன்று தெப்ப உத்சவம் மற்றும் நாளை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !