திருவொற்றியூர் பெருந்தேவி தாயார் திருமஞ்சனம் விமரிசை
திருவொற்றியூர்: பெருந்தேவி தாயார் திருமஞ்சனம் – ஊஞ்சல் சேவை, இன்று கோலாகலமாக நடந்தது.
திருவொற்றியூர், காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோவில், 400 ஆண்டுகள் பழமையானது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கோவிலில், ஐஸ்வர்யங்களை வாரி வழங்கும் கடைவெள்ளி பிரம்மோத்வசம், இன்றுவிமரிசையாக நடந்தது. அன்று காலை, பெருந்தேவி தாயாருக்கு, பால், மஞ்சள், சந்தனம், இளநீர் உள்ளிட்ட மங்கள பொருட்களால், அபிஷேகமும், தொடர்ந்து, திருமஞ்சனம் நடைபெற்றது. மாலையில், சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவ தாயார், ஒய்யாலி நடனமாடிய படி, கருங்கல் மண்டபத்தை வந்தடைந்தார். பட்டாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இந்த ஊஞ்சல் சேவையின்போது, தாயாரை சேவித்தாள் தரித்திரம் நீங்கி, சுபிஷம் பெறுவர். நோய் நொடி விலகி, இன்புற்று வாழ்வர் என்பது ஐதீகம். திருமஞ்சனம் மற்றும் ஊஞ்சல் சேவையில் பங்கேற்ற பக்தர்கள் பாடல்கள் பாடியும், ஸ்லோகங்கள் உச்சரித்தும், தாயாரை வழிபட்டனர்.