இடையபட்டியில் சங்கிலி கருப்புசாமி கோயில் உற்ஸவம்
ADDED :3 hours ago
அலங்காநல்லுார்: இடையபட்டியில் சங்கிலி கருப்பு சாமி கோயில் உற்ஸவ விழா மூன்று நாட்கள் நடந்தது.
முதல் நாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், நடன நாட்டிய நிகழ்ச்சி நடந்தன. 2ம் நாள் நாதஸ்வர நையாண்டி மேளம், ராஜா ராணி ஆட்டத்துடன் பம்பை உறுமி மேளம், வான வேடிக்கையுடன் சுவாமி திருவீதிகளில் எழுந்தருளினார். பக்தர்கள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்து வழிபட்டனர். மூன்றாம் நாள் பக்தர்கள் கோயில் முன் பொங்கல் வைத்தும், கிடா வெட்டியும் வழிபாடு செய்தனர். விழா நாட்களில் தினமும் இரவு கிராமிய, திரைப்பட கலை நிகழ்ச்சிகள் நடந்தன.