உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

 கடலுார்: சுத்துக்குளம் திரவுபதியம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

கடலுார், சுத்துக்குளம் வன்னியர் கிராமம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி உற்சவம் கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. 5ம் நாள் உற்சவமான நேற்று அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மூலவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து, திரவுபதியம்மனுக்கும், அர்ச்சுணனனுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நாளை 26ம் தேதி காலை அபிஷேகம், அர்ஜூனன் தபசு உற்சவம், 27ம் தேதி காலை அபிஷேகம், 28ம் தேதி காலை கரக உற்சவம் 29ம் தேதி மாலை 6:00 மணிக்கு தீமிதி உற்சவம் நடக்கிறது. 30ம் தேதி மாலை தர்மர் பட்டாபிஷேகம், 31ம் தேதி காலை மஞ்சள் நீராட்டு உற்சவம், 1ம் தேதி மாலை 6:00 மணிக்கு விடையாற்றி உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கிராம வாசிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !