குரு சித்தானந்தா கோவிலில் குரு பெயர்ச்சி விழா சிறப்பு வழிபாடு
ADDED :1 hours ago
புதுச்சேரி: மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு குரு பகவான் இன்று பெயர்ச்சி அடைந்ததை தொடர்ந்து , கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவிலில், சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா சுவாமி கோவிலில் இன்று குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது. குரு பகவான் காலை 11 மணியளவில் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பிரவேசித்தார். இதனையொட்டி கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில் கலச பிரதிஷ்டையுடன் குரு பெயர்ச்சி விழா துவங்குகிறது. தொடர்ந்து கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெற்று, குருவிற்கு மகா அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.