குருவித்துறையில் குருபெயர்ச்சி விழா; பரிகார பூஜை செய்து பக்தர்கள் பரவசம்
சோழவந்தான்: மகுருவித்துறை சித்திரரத வல்லப பெருமாள் கோயிலில் இன்று மே 24 ல் குருப்பெயர்ச்சி விழா துவங்கியது. நவகிரஹங்களில் நன்மைகளை வாரி வழங்குபவரான குருபகவான் ஆண்டுதோறும் ஒவ்வொரு ராசிக்கும் பெயர்ச்சியாவார். இந்த ஆண்டு மே 26 செவ்வாய் இன்று காலை 11:08 மணிக்கு மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியடைந்தாார். இதை முன்னிட்டு இன்று மே 26 காலை 7:35 மணிக்கு 5ம் கால லட்சார்ச்சனை நடைபெற்றது. 9:00 மணிக்கு லட்சார்ச்சனை நிறைவு, புண்ணியாக வாசனம், சாத்துமுறை கோஷ்டி, காலை 10:00 மணிக்கு கட்டணசீட்டு பெற்ற ராசிக்காரர்கள், பரிஹாரராசி முன்பதிவு செய்த நபர்களுக்கு அர்ச்சனை நடைபெற்றது. காலை 10:30 மணிக்கு யாகசாலை ஆரம்பம், புண்ணியகாவாசனம்,மஹா சங்கல்பம்,யாகம் கடம்புறப்பாடு, திருமஞ்சனம், மஹாஆரத்தி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரிகார பூஜை செய்து வழிபட்டனர்.