உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி சிறப்பு அபிஷேகம்

மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி சிறப்பு அபிஷேகம்

புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு  குரு பகவானுக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் நடைபெற்றது.

நவக்கிரகங்களில் ஒருவரான குரு பகவன் இன்று (26ம் தேதி) காலை 11:00 மணிக்கு, மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு இடம் பெயர்ந்தார். குருப் பெயர்ச்சியை முன்னிட்டு, புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில் உள்ள சனீஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள 12 அடி உயர குரு பகவானுக்கு சிறப்பு பூஜை மற்றும் பரிகார பூஜை நடைபெற்றது.  இன்று காலை 6;00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் பூஜை துவங்குகிறது. தொடர்ந்து நவக்கிரக ஹோமம், கோ பூஜை, மகாலட்சுமி ஹோமங்கள் நடைபெற்றது. தொடர்ந்து சந்தனாதி தைலம், நல்லெண்ணெய், அரிசி மாவு, மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட 30 வகை நறுமணப் பொருட்களால் மகா அபிேஷகம் நடந்தது. 

பின்னர் குருசாந்தி, நவக்கிரக சாந்தி, நட்சத்திர ேஹாமம், ராசி ஹோமம், தட்சணாமூர்த்தி ஹோமங்களை தொடர்ந்து மகா பூர்ணாஹூதி நடக்கிறது. தொடர்ந்து ராசி பரிகார ஹோமங்களை தொடர்ந்து, 108 லிட்டர் பாலபிஷேகம் , 11:07 மணிக்கு கலசாபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து குரு பகவானுக்கு யானை வாகனத்துடன் கூடிய பஞ்சலோக கவசத்தை, சிதம்பர கீதாராம் குருக்கள் சாற்றுகிறார். குரு பெயர்ச்சியை முன்னிட்டு நடக்கும் பரிகார ஹோமங்களில் கலந்து கொள்பவர்களுக்கு குரு யந்திரம், கனகபுஷ்பராகம் ராசிக்கல், முடிக்கயிறு, தாயத்து, ரக்ைஷ வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !