உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலில் உள்ள ராமர் பாலத்தை தரிசிக்க படகு சவாரி; இலங்கையில் சோதனை ஓட்டம்

கடலில் உள்ள ராமர் பாலத்தை தரிசிக்க படகு சவாரி; இலங்கையில் சோதனை ஓட்டம்

ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க இன்று இலங்கை அதிகாரிகள் படகில் சோதனை ஓட்டம் நடத்தினர்.


ராமாயண வரலாற்றில், ராவணன் சிறைபிடித்து சென்ற சீதை மீட்க ஸ்ரீராமர், லட்சுமனர், அனுமான் சேனைகள் தனுஷ்கோடி முதல் இலங்கை வரை கடலில் பாலம் அமைத்து ராவணனுடன் போரிட்டு சீதை மீட்டு வந்தனர். இந்த புகழ்பெற்ற ராமர் பாலம் 18 மணல் திட்டுகளாக தனுஷ்கோடி முதல் இலங்கை தலைமன்னார் வரை உள்ளது. இதில் தனுஷ்கோடியில் இருந்து 7 மணல் தீடையுடன் இந்திய எல்லை முடிகிறது. இந்நிலையில் ராமர் பாலத்தை சுற்றுலா பயணிகள் கண்டு தரிசிக்க இன்று இலங்கை வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகம், மன்னார் மாவட்ட ஆட்சியர் கனவேஸ்வரன், வடக்கு மாகாண சுற்றுலாத்துறை தலைவர் விவேகானந்தன் உள்ளிட்ட இலங்கை அதிகாரிகள் பலர் 4 படகில் தலைமன்னாரில் இருந்து புறப்பட்டு 3ம் மணல் தீடை வரை சுற்றுலா படகில் சவாரி செய்து சோதனை ஓட்டம் நடத்தினர். பின் சுற்றுலா படகு சவாரியின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். செப்., 28ல் முறைப்படி சுற்றுலா படகு சவாரி துவக்கிட இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !