உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடராஜருக்கு சதுர்த்தசி அபிஷேகம்

பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடராஜருக்கு சதுர்த்தசி அபிஷேகம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.


சிவாலயங்களில், நடராஜ பெருமாளுக்கு ஆண்டுக்கு ஆறு அபிஷேகங்கள் நடக்கிறது. அதில், புரட்டாசி மாதம் வளர்பிறை  சதுர்த்தசி திதியையொட்டி, பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இன்று நடராஜர், சிவகாமி அம்மையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் நடராஜர், சிவகாமி  அம்மன் அருள்பாலித்தார். அதன்பின், மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பொள்ளாச்சி பகுதியில் உள்ள சிவாலயங்களில் நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !