உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனந்த பத்மநாப விரதம்; திருமலை திருப்பதியில் சக்ர ஸ்நானம் சிறப்பு வழிபாடு

அனந்த பத்மநாப விரதம்; திருமலை திருப்பதியில் சக்ர ஸ்நானம் சிறப்பு வழிபாடு

திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி புஷ்கரிணியில் சக்கர ஸ்நானம் செய்யப்பட்டது, 


திருமலையில் ஆண்டுதோறும் பாத்ரபத சுக்ல சதுர்தசி நாளில் அனந்த பத்மநாப விரதம் அனுசரிக்கப்படுகிறது. இன்று ஸ்ரீவாரி கோயிலில் காலை துவங்கிய விழாவில் வராஹசுவாமி கோயில் அருகே அமைந்துள்ள சுவாமி புஷ்கரிணியில் ஸ்ரீ சுதர்சன சக்கரத்தாழ்வார் எளுந்தருளினார். அங்கு பால், தயிர், தேன், தேங்காய் நீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றைக் கொண்டு சிறப்பு அபிஷேகம்செய்யப்பட்டது, அதைத் தொடர்ந்து சக்கர ஸ்நானம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் முத்தடா ரவிச்சந்திரா, அதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி - கலி யுகத்தின் முதன்மை தெய்வம் - மகா விஷ்ணுவின் எல்லையற்ற வடிவங்களில் மகத்தான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது,  நாடு முழுவதும் உள்ள 108 ஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேசங்களில் ஆண்டுதோறும் அனந்த பத்மநாப விரதம் அனுசரிக்கப்படுவது வழக்கம். இந்த 108 திவ்ய தேசங்களில் திருமால் முதன்மையானவர் என்பதால், கோயில் அர்ச்சகர்கள் ஆகம சாஸ்திரங்களின்படி அனந்த பத்மநாப விரதத்தை நடத்தினர். திருமலையில் ஸ்ரீவாரி பிரம்மோத்ஸவத்தின் இறுதி நாளிலும், வைகுண்ட துவாதசி, ரத சப்தமி மற்றும் அனந்த பத்மநாப விரதம் போன்ற மங்களகரமான சந்தர்ப்பங்களில் மட்டுமே சக்ர ஸ்நானம் செய்யப்படுவது குறிபிடத்தக்கது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !