உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில் தரிசன நேரம் அறிவிப்பு

சென்னை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில் தரிசன நேரம் அறிவிப்பு

சென்னை: தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு, தரிசன நேரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.


தி.நகரில், திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, புரட்டாசி மாத சனிக்கிழமைகளான, இன்று, வரும் அக்., 3, 10, 17 ஆகிய தேதிகளில் சிறப்பு வழிபாடு, தரிசன நேரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதிகாலை 4:00 மணி முதல் 6:30 மணிவரை சுப்ரபாதம், அபிஷேகம் நடக்கிறது. காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை நைவேத்தியம் நடக்கிறது.  காலை 7:30 – 11:00; காலை 11:45 -– மதியம் 2:00; மதியம் 3:00 -– 5:30; மாலை 6:00 முதல் இரவு 10:00 மணி வரை சர்வ தரிசனம் நடப்பதாக, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !