உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொங்கு மண்டல குரு ஸ்தலம்; காலகாலேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி விழா

கொங்கு மண்டல குரு ஸ்தலம்; காலகாலேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி விழா

கோவில்பாளையம்; கோவில்பாளையம், காலகாலேஸ்வரர் கோவிலில், குரு பெயர்ச்சி விழா இன்று நடந்தது.

கொங்கு மண்டல குரு பரிகார ஸ்தலம் என்று அழைக்கப்படும், கோவில்பாளையம், காலகாலேஸ்வரர் கோவிலில், குரு பெயர்ச்சியை முன்னிட்டு, இன்று காலை வேள்வி பூஜை நடைபெற்றது. இதையடுத்து காலை 11:00 மணிக்கு குருபகவான், மிதுன ராசியிலிருந்து, கடக ராசிக்கு பிரவேசித்தார். இதைத்தொடர்ந்து, குருபகவானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான் அருள் பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. அறங்காவலர் குழு தலைவர் நாகராஜ், செயல் அலுவலர் ராமஜோதி, அறங்காவலர்கள் உள்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர். குரு பெயர்ச்சியை முன்னிட்டு இன்று (27ம் தேதி) காலை 7:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை லட்சார்ச்சனை நடைபெறுகிறது. பக்தர்கள் இதில் பங்கேற்று இறையருள் பெறலாம், என கோவில் கமிட்டியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !