அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா சிறப்பு வழிபாடு
ADDED :14 hours ago
அன்னூர்; அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில், குரு பெயர்ச்சி விழா இன்று நடந்தது
அன்னூர், அருந்தவ செல்வி உடனமர் மன்னீஸ்வரர் கோவிலில், குரு பெயர்ச்சி விழா குரு பகவான் சன்னதியில் இன்று நடந்தது. காலை 9:00 மணிக்கு வேள்வி பூஜை குருமூர்த்தி சிவாச்சாரியார் தலைமையில் துவங்கியது. குரு பகவான் காலை, 11 மணி, 7 நிமிடத்திற்கு, மிதுன ராசியில் இருந்து, கடக ராசிக்கு பிரவேசித்தார். இதையடுத்து சிறப்பு வழிபாடு நடந்தது. குருபகவான் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். பரிகாரம் செய்ய வேண்டிய பக்தர்கள், முல்லை மலர், அரச இலை, கொண்ட கடலை, மஞ்சள் துண்டு ஆகியவற்றுடன் வழிபாட்டில் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. அறங்காவலர் குழு தலைவர் நடராஜன், அறங்காவலர்கள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.