கிணத்துக்கடவு தண்டு மாரியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா
ADDED :2 days ago
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, தேவராடிபாளையம் தண்டு மாரியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா நடக்கிறது.
கிணத்துக்கடவு, தேவராடிபாளையம் தண்டு மாரியம்மன் கோவிலில், திருக்கல்யாண மஹோத்சவ பொங்கல் பூச்சாட்டு விழா நிகழ்ச்சி கடந்த 25ம் தேதி, கம்பம் நடுதல் மற்றும் வள்ளி கும்மி நிகழ்ச்சியுடன் துவங்கியது. 26ம் தேதி, பூவோடு எடுத்தல், அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. 27ம் தேதி, மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், கம்பம் விஸர்ஜனம் நிகழ்ச்சிகள் நடக்கிறது. 28ம் தேதி, காலை 9:00 மணிக்கு மேல், அம்மன் திருவீதி உலா மற்றும் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. 29ம் தேதி, மதியம் 12:00 மணிக்கு, அபிஷேக பூஜை மற்றும் அன்னதானம் நடக்கிறது.