எல்லை முனீஸ்வரர் கோவிலில் பால்குடம், அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED :1 days ago
காரைக்குடி; காரைக்குடியில் உள்ள எல்லை முனீஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்தும் அழகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
காரைக்குடியில் உள்ள இடையர் தெருவில் எல்லை முனீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா விமரிசையாக நடைபெறும். இவ்வாண்டு, 39வது ஆண்டு திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய திருவிழாவான பால்குடத் திருவிழா நேற்று நடந்தது. நேற்று முத்தாலம்மன் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் பறவை காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சிறுவர்கள் கருப்பர் வேமிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினார். இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.