தேனி தட்ஷிணாமூர்த்தி கோவிலில் குருபெயர்ச்சி சிறப்பு பூஜை
ADDED :10 hours ago
தேனி, தேனி அரண்மனைப்புதுார் அருகே வேதபுரீ சித்பவாநந்த ஆசிரம், தட்ஷிணாமூர்த்தி கோயில் அமைந்துள்ளது. இக் கோயிலில் நேற்று குருப்பெயர்ச்சியை முன்னிட்டு குருபகவான் காலை 11:00 மணிக்கு மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். வேதபுரீ கோயிலில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு காலை சிறப்பு ஹோமம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், புஷ்பாஞ்சலி, கூட்டு வழிபாடு, மகா தீபாராதனை நடந்தது. சிறப்பு பூஜையில் தேனி, வீரபாண்டி, முல்லைநகர், அரண்மனைப்புதுார் உள்ளிட்ட பகுதிகள், மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.