உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  உடுமலை கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு

 உடுமலை கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு

 உடுமலை: உடுமலையிலுள்ள கோவில்களில், குருப்பெயர்ச்சி விழா சிறப்பு பூஜைகள் நடந்தன.

ஸ்ரீ குருபகவான், மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியான நிலையில், உடுமலையிலுள்ள பிரசன்ன விநாயகர் கோவில் மற்றும் ருத்ரப்பநகர், பஞ்சமுக லிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு யாக பூஜைகள்  நடந்தன.  ருத்ரப்பநகர் ஸ்ரீ சித்திவிநாயகர், ஸ்ரீ விசாலாட்சியம்மன் உடனமர் ஸ்ரீ பஞ்சமுகலிங்கேஸ்வரர் , ஸ்ரீ ரேணுகாதேவி, ஸ்ரீ குழந்தை வேலாயுத சுப்ரமணியர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா, நேற்று காலை, 9:00 மணிக்கு நடந்தது. யாக வேள்வி, பரிகார அர்ச்சனைகள், ஸ்ரீ குருபகவானுக்கு மகா அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதே போல், பல்வேறு சிவாலயங்களில், குரு பெயர்ச்சி விழா, சிறப்பு யாக பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !