உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரிஷிவந்தியம்‌ அர்த்தநாரீஸ்வரர்‌ கோவிலில்‌ குருபெயர்ச்சி விழா

ரிஷிவந்தியம்‌ அர்த்தநாரீஸ்வரர்‌ கோவிலில்‌ குருபெயர்ச்சி விழா

 ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம்‌ அர்த்தநாரீஸ்வரர்‌ கோவிலில்‌ குருபெயர்ச்சி விழா நேற்று நடந்தது.

ரிஷிவந்தியத்தில் உள்ள 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில், நவகிரக சன்னதியில் வடக்கு நோக்கிய திசையில் குரு பகவான் அருள்பாலிக்கிறார்.  நேற்று காலை 11.05 மணியளவில் குரு பகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியடைந்தார். இதையொட்டி, மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு நேற்று காலை சிறப்பு தேனபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, குருபகவானுக்கு சந்தனம், விபூதி, இளநீர், தேன் உட்பட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து, திருவாச்சி வைத்து குரு பகவானுக்கு பல வண்ண மலர்களால் அலங்கரித்து, சோடச உபச்சாரமும், மகாதீபாராதணை காண்பிக்கப்பட்டது. கோவில் குருக்கள் நாகராஜ், சோமு ஆகியோர் பூஜைகளை செய்தனர். கட்டளைதாரர் கந்தவிலாஸ் ஜெயக்குமார் குடும்பத்தினர் உட்பட திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !