தேனி மாவட்ட குருப்பெயர்ச்சி சிறப்பு பூஜை
தேனி: தேனி அரண்மனைப்புதுார் அருகே வேதபுரீ சித்பவாநந்த ஆசிரம், தட்ஷிணாமூர்த்தி கோயில் அமைந்துள்ளது. இக் கோயிலில் நேற்று குருப்பெயர்ச்சியை முன்னிட்டு குருபகவான் காலை 11:00 மணிக்கு மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். வேதபுரீ கோயிலில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு காலை சிறப்பு ஹோமம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், புஷ்பாஞ்சலி, கூட்டு வழிபாடு, மகா தீபாராதனை நடந்தது. சிறப்பு பூஜையில் தேனி, வீரபாண்டி, முல்லைநகர், அரண்மனைப்புதுார் உள்ளிட்ட பகுதிகள், மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கந்தநாதர் கோயிலில் குருப்பெயர்ச்சி ஆண்டிபட்டி: டி.சுப்புலாபுரம் கந்தநாதர் கோயிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது. நேற்று முற்பகல் 11:08 மணிக்கு குருபகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியானார். இதனை தொடர்ந்து கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடந்தது. குருபகவான் உட்பட நவகிரகங்களுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர் உட்பட பல வகை அபிஷேகங்கள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
12 ராசிகளை சேர்ந்த பக்தர்கள் குரு பகவானுக்கு அர்ச்சனை செய்து வேண்டுதல் நிறைவேற பிரார்த்தனை செய்தனர்.