உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவகோட்டையில் ரத்தின வேல் சிறப்பு பூஜை

தேவகோட்டையில் ரத்தின வேல் சிறப்பு பூஜை

தேவகோட்டை; குன்றக்குடியில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வேல் ரத்தினகற்கள், வைரக்கற்களால் செய்யப்பட்டது. இந்த வேல் தேவகோட்டைக்கு மாசி மகத்தன்றும், பழநிக்கு தைப்பூசத் திற்கும் மட்டுமே வருடந்தோறும் செல்லும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேவகோட்டையில் உள்ள தி.ராம. சாமி. கோயிலுக்கு வரும். இந்த மரபுப்படி நேற்று ரத்தினவேல் தேவகோட்டை கொண்டு வரப்பட்டது. நகர பள்ளிக்கூடத்தில் பூஜை செய்யப்பட்டு அங்கிருந்து ரத்தினவேல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கைலாச விநாயகர் கோயிலில் பூஜை செய்தபின் ஊர்வலமாக தி.ராம.சாமி. கோயிலுக்கு வந்தது. அங்கு அலங்கரிக்கப்பட்ட முருக பெருமான் கையில் ரத்தினவேல் அணிவிக்கப்பெற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. வழி நெடுகிலும் பக்தர்கள் பன்னீர் அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து இந்த வேலை வெளியே எடுத்தால் 26 மூடை அரிசியில் சாதம் வடித்து மக்களுக்கு விருந்து வழங்கும் ஐதீகப்படி சமையல் செய்து ரத்தினவேலிற்கு மகேஸ்வர பூஜை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்து விருந்து அருந்தி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !