உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒரே நாளில் 125 திருமணங்கள் திருத்தணியில் திரண்ட பக்தர்கள்

ஒரே நாளில் 125 திருமணங்கள் திருத்தணியில் திரண்ட பக்தர்கள்

திருத்தணி; திருத்தணியில், இன்று ஒரே நாளில், 125 திருமணங்கள் நடந்ததால், மலைக்கோவிலில் பக்தர்கள் திரண்டனர்.


திருத்தணி நகராட்சியில், 200க்கும் மேற்பட்ட தனியார் திருமண மண்டபங்கள் உள்ளன. இது தவிர, திருத்தணி முருகன் மலைக்கோவிலில், கோவில் நிர்வாகம் சார்பில், புதிய திருமண ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்து, திருமண சான்று வழங்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று வைகாசி மாதத்தில் வரும் சுபமுகூர்த்தம் என்பதால், நேற்று திருத்தணியில் மொத்தம் 125 திருமணங்கள் நடந்தன. முருகன் கோவில் தேர்வீதி பகுதியில், கோவில் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட தற்காலிக மண்டபங்களில் 45 திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன. வழக்கமாக வரும் பக்தர்கள், திருமணத்திற்கு வந்த உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திருமண தம்பதியரின் பெற்றோர் என, முருகன் மலைக்கோவிலில், 40,000த்திற்கும் மேற்பட்டோர் மலைக்கோவிலில் குவிந்தனர். அதனால், பொது வழியில் இரண்டரை மணி நேரமும், 100 ரூபாய் டிக்கெட் தரிசனத்தில் ஒரு மணி நேரமும் வரிசையில் காத்திருந்து, பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்தனர். திருமண முகூர்த்த நாள் என்பதால், மலைப்பாதையில் செல்வதற்கு ஆட்டோக்கள் உட்பட அனைத்து வாகனங்களுக்கும், மாலை 3:30 மணி வரை தடை விதிக்கப்பட்டது. அதன் பின், கார்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. பக்தர்கள் வசதிக்காக, கோவில் சார்பில், 9 பேருந்துகள் இயக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !