அச்சிறுபாக்கம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
அச்சிறுபாக்கம்; அகிலியில் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக, இன்று நடந்தது.
அகிலி ஊராட்சியில் பழமை வாய்ந்த முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த முடிவு கிராமத்தினர் செய்தனர். அதை தொடர்ந்து இரு ஆண்டுகளுக்கு முன் திருப்பணி தொடங்கி நடந்து வந்தது. திருப்பணிகள் முடிந்ததை அடுத்து, கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள், கடந்த 27ம் தேதி தொடங்கின. அதை தொடர்ந்து கணபதி பூஜை, விக்னேஸ்வர பூஜை மற்றும் கோ பூஜையும் நடந்தது. இன்று காலை 10:00 மணிக்கு முத்துமாரியம்மன் கோவில் கோபுர விமானத்திற்கும், 10:15 மணிக்கு மூலவருக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. பின், முத்துமாரியம்மனுக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை காட்டப்பட்டது. அகிலி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்கள் திரளாக வந்து, சுவாமியை தரிசித்தனர்.