உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆற்றல் தரும் அறுபடை வீடு ஆறுமுகன்

ஆற்றல் தரும் அறுபடை வீடு ஆறுமுகன்

 • பஞ்சாமிர்தம்: பழனி முருகன் கோவிலில் பிரதானமாக வழங்கப்படும், ஐந்து இயற்கை பொருட்கள் (வாழைப்பழம், தேன், நெய், திராட்சை, பேரீச்சம்பழம்) சேர்த்து செய்யப்படும் பிரசாதம்.


• தினை மாவு: குறவர் குலத்தில் பிறந்த வள்ளியை மணந்த முருகனுக்குத் தேன் மற்றும் தினை மாவு படைப்பது வழக்கம்.


• திருப்பாகம்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் போன்ற முக்கிய நாட்களில் பிரசாதமாக வழங்கப்படும் கடலை மாவு, பால், மற்றும் நெய் சேர்ந்த இனிப்பு.


• கந்தர் அப்பம்: கார்த்திகை விரதம் மற்றும் சஷ்டி நாட்களில் முருகனுக்கு நைவேத்தியமாக செய்யப்படும் சுவையான இனிப்பு பலகாரம்.


• கற்கண்டு சாதம்: முருகனின் வாமதேவ முகத்திற்குரிய நைவேத்தியங்களில் ஒன்றாகும்.


வழிபாட்டு முறை: முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமைகளில் இந்த நைவேத்தியங்களை வைத்து, செவ்வரளி மாலைகள் அணிவித்து, தீபம் ஏற்றி வழிபடலாம். கந்த சஷ்டி கவசம் அல்லது திருப்புகழ் பாடல்களைப் பாடி வழிபடுவது கூடுதல் பலன் தரும்


திருப்பரங்குன்றம் – மதுரை


முருகன் தெய்வானையைத் திருமணம் செய்த தலம்


திருச்செந்துார் – துாத்துக்குடி


சூரபத்மனை வதம் செய்து அசுரர்களை வென்ற தலம்.


பழமுதிர்ச்சோலை –மதுரை


ஒளவையார் பாடி சுவைத்த தலம். இங்கு முருகன் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார்.


பழனி –திண்டுக்கல்


முருகனின் பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி (ஞானப்பழம்) திருக்கோயில்.


சுவாமிமலை – தஞ்சாவூர்


தந்தை சிவபெருமானுக்கே பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்த தலம் (சிவகுருநாதன்).


திருத்தணி- – திருவள்ளூர்


முருகப்பெருமான் கோபம் தணிந்து சாந்தமாக அமர்ந்தருளும் மலை.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !