உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் வைகாசி விசாக விழா; தேரில் முருகப்பெருமான்.. அலைமோதும் பக்தர்கள்

பழநியில் வைகாசி விசாக விழா; தேரில் முருகப்பெருமான்.. அலைமோதும் பக்தர்கள்

பழநி; பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாக விழாவில் இன்று காலை 10:30 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருளினார். மாலை 4:30 மணிக்கு விசாக தேரோட்டம் நடக்கிறது.


பழநி கிழக்கு ரதவீதி பெரியநாயகிகோயிலில் வைகாசி விசாக விழா மே 24 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் புறப்பாடு நடைபெற்ற நிலையில் நேற்று (மே 29) மாலை கோயில் முன் மண்டபத்தில் வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமி எழுந்தருள சிறப்பு ஹோமம், அபிஷேகம் ,அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதை தொடர்ந்து இரவு 7:55 மணிக்கு நடந்த திருக்கல்யாணத்தில் அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இன்று காலை 10:30 மணிக்கு தேரேற்றம், மாலை 4:30 மணிக்கு விசாக தேரோட்டம் நடக்கிறது. இரவு பெரிய தந்த பல்லாக்கில் தேர்க்கால் பார்த்தலுடன் ஜூன் 2 அன்று திருஊடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் காவடி, பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !