உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

விழுப்புரம்: விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழாவையொட்டி, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதனையொட்டி, கடந்த 22ம் தேதி மாலை பகவத் அனுக்ஞை, அங்குரார்ப்பணம், கருட பிரதிஷ்டை நடந்தது. 23ம் தேதி இரவு அம்ச வாகனம், 24ம் தேதி காலை சிம்ம வாகனம், 25ம் தேதி ஹனுமந்த வாகனம், 26ம் தேதி சேஷ வாகனம், 27ம் தேதி கருட வாகன மகோத்ஸவம், 28ம் யானை வாகனம் வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்தது.  தொடர்ந்து, நேற்று இரவு 7:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத வைகுண்டவாச பெருமாளுக்கு  திருக்கல்யாணம், இரவு இந்திர விமானம் வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !