ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம்
ரத்தினகிரி: ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில், வைகாசி விசாக தேரோட்டம் விமர்சையாக நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம், கீழ் மின்னல் அடுத்த ரத்தினகிரியில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும், ஆடி கிருத்திகை, கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் விமர்சையாக கொண்டாடப்படும். அதன்படி, இந்த ஆண்டிற்கான வைகாசி விசாக திருவிழா, மே 22ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், பல்வேறு வாகனங்களில் முருகப்பெருமான் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று நடந்தது. கூட்டுறவு துறை அமைச்சர் காந்திராஜ், வெளிநாடு வாழ் தமிழர் நல்வாழ்வு துறை அமைச்சர் தென்னரசு, வேலுார் எம்.எல்.ஏ., வினோத் கண்ணன், காட்பாடி எம்.எல்.ஏ., சுதாகர், ராணிப்பேட்டை எம்.எல்.ஏ., தாஹிரா ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து, துவக்கி வைத்தனர்.