மகா பெரியவா அவதார தினம் ; உடுமலை கோவிலில் சிறப்பு பூஜை
உடுமலை: உடுமலை ஜி.டி.வி. லே–அவுட்., செல்வ விநாயகர் கோவில் வளாகத்தில், ஒவ்வொரு மாதமும் காஞ்சி மகா பெரியவாளின் அனுஷ நட்சத்திரத்தை முன்னிட்டு, அனுஷ பூஜை நடைபெற்று வருகிறது.
வைகாசி மாத அனுஷ நட்சத்திரமான இன்று காஞ்சி மகா பெரியவா, 133வது அவதார தினம் ஆகும். இத்தினத்தையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. காலையில் விக்னேச்வர பூஜையுடன் ஆரம்பித்து, ஸங்கல்பம், குருத்யானம், பூர்ணகும்ப மரியாதை, பீட பூஜை, அனுஷ பிரதான பூஜை சித்திர பட ஆவாஹனம், ஆவஹந்தி ஹோமம், உபநிஷத் பாராயணம், வேதபாராயணம் நடந்தது. தொடர்ந்து, சிவபஞ்சாயதன பூஜா அபிஷேக உபசாரங்கள், மஹா பெரியவா அர்ச்சனை, பூஜை, உபசாரங்கள், குரு கீதம், ஸ்தோத்திர பாராயணம், தூப, தீப நைவேத்யம், மந்திர புஷ்பம், சதுர்வேத பாராயணம், ஸ்வஸ்த்தி வசனம், கற்பூர ஆரத்தி காட்டப்பட்டு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.