பழநி முருகன் கோயிலில் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
ADDED :4 days ago
பழநி; பழநி முருகன் கோயிலில் விடுமுறையை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அதிகம் இருந்தது.
பழநி முருகன் கோயிலில் வெளிமாநில, மாவட்ட பக்தர்கள் விடுமுறை தினத்தை முன்னிட்டு அதிகளவில் வருகை புரிந்தனர். கோயிலுக்கு செல்ல பக்தர்கள், ரோப் காரில் பல மணி நேரம் காத்திருந்தனர். கோயிலில் பொது மற்றும் கட்டண தரிசன வரிசையில் 3 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் காத்திருந்தனர். குடமுழுக்கு மண்டபம் மூலம் படிப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கிரிவலப் பாதையில் மீனாட்சியம்மன் கோயில் அருகே பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது. கிரிவீதியில் பேட்டரி காரில் பக்தர்கள் முண்டியடித்து ஏறினர்.