உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விடுமுறை தினம் : ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் ஏராளமான பக்தர்கள் நீராடினர்

விடுமுறை தினம் : ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் ஏராளமான பக்தர்கள் நீராடினர்

ராமேஸ்வரம்; விடுமுறை தினம் யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள்.

இன்று விடுமுறை யொட்டி தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்தனர். பின் கடலில் நீராடி விட்டு கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினார்கள். பின் கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகையால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் அக்னி தீர்த்த கடற்கரை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திடீரென உள்வாங்கிய அக்னி தீர்த்தம் : இன்று அதிகாலை திடீரென அக்னி தீர்த்த கடல் 100 மீ., தூரத்திற்கு உள்வாங்கியதால் பாசிபடர்ந்த பவளப்பாறைகள் வெளியில் தெரிந்தது. இதனை கண்டதும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின் மதியம் 2 மணிக்கு மேல் கடல் நீர்மட்டம் உயர்ந்ததும் அக்னி தீர்த்தம் இயல்பு நிலைக்கு திரும்பியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !