நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :2 days ago
நெல்லிக்குப்பம்: பூலோகநாதர் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நெல்லிக்குப்பம், பூலோகநாதர் கோவிலில் வைகாசி விசாகம் மற்றும் அக்னிநட்சத்திர நிவர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. 108 கலசங்களில் புனிதநீர் நிரப்பி யாகம் செய்து முருக பெருமானுக்கும், பூலோகநாதருக்கும் கலசாபி ஷேகம் செய்தனர். தொடர்ந்து, சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.