உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருவடிக்குப்பத்தில் சந்திரசேகர சுவாமிகளின் 133-வது ஜெயந்தி விழா

கருவடிக்குப்பத்தில் சந்திரசேகர சுவாமிகளின் 133-வது ஜெயந்தி விழா

​புதுச்சேரி: புதுச்சேரி, கருவடிக்குப்பத்தில் உள்ள சாய் சங்கர பக்த சபா வேத ஆசிரம குருகுலத்தில், காஞ்சி காமகோடி பீடாதிபதி சந்திரசேகர சுவாமிகளின் 133-வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

விழாவை முன்னிட்டு, குருகுலத்தில் உள்ள பசுக்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. காலை முதல் வேத பாராயணம்,​ பஜனை மற்றும் சந்திரசேகர சுவாமிகளின் திருவுருவ சிலை ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை குருகுல ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !