உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  தஞ்சை பெரியகோவில் கோட்டை சுவர் அளவீடு

 தஞ்சை பெரியகோவில் கோட்டை சுவர் அளவீடு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோவிலில், கோட்டை சுவரை, இந்திய தொல்லியல்துறையின் அளவீடு செய்தனர்.

உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில் அகழி, கோட்டை மதில் சுவர், கோட்டை கொத்தளம் எனும் கட்டுமானங்களுடன், நாயக்கர் காலத்தில், கோவிலுக்கு அரணான செம்பூரான் கற்களாலும், சுண்ணாம்பு கலவையாலும் இணைத்து கட்டப்பட்டுள்ளது. பெரிய கோவிலை சுற்றி உள்ள பெரிய கோட்டைச்சுவர், 35 அடி உயரம், 15 அடி அகலம் உடையது.

இந்த சுவர் பல இடங்களில் சிதிலமடைந்துள்ளது. கோவிலின் முகப்பு மற்றும் பின்புற அகழியில், மரங்களும், செடி, கொடிகளும் வளர்ந்து காடு போல் இருந்தன. இதை மாவட்ட நிர்வாகம் முயற்சியால் துாய்மையாக்கப்பட்டன.

இதையடுத்து, சிதைந்து காணப்படும் கோட்டை சுவரை, மீண்டும் பழமை மாறாமல், சீரமைப்பு செய்யும் விதமாக, இந்திய தொல்லியல்துறை முதுநிலை பாரமரிப்பு அலுவலர் சோபியா முன்னிலையில், இந்திய தொல்லியல்துறை அதிகாரிகள் சுவரின் சேதம் குறித்து ஆய்வு செய்தனர். பிறகு கட்டுமான பணிக்காக அளவீடு பணிகளில் ஈடுபட்டனர். தொல்லியல்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘கோட்டை சுவர் சில ஆண்டுகளுக்கு முன் சீரமைக்கப்பட்டன. பல்வேறு காரணங்களால் பணிகள் கைவிடப்பட்டன. தற்போது, கோட்டை சுவரை சீரமைக்கும் பணியை தொடங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. அளவீடு பணி நடந்து வருகிறது. பழமை மாறாமல் செய்யும் விதமாக செம்பூரான் கற்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட உள்ளன. விரைவில் பணிகள் தொடங்கும்’ என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !