வைகாசி பவுர்ணமியில் சத்தியநாராயணர் வழிபாடு
ADDED :130 days ago
கோவை: சென்னனுார் ஸ்ரீ ராதாகிருஷ்ணர் கோயிலில் நம்மாழ்வார் இயற்றிய 1,352 பாசுரங்களும் பாகவதோத்மர்களால் பாராயணம் செய்யப்பட்டது, தீபாராதனையும், சாற்றுமுறையும், தீர்த்தபிரசாதமும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து யோகநரசிம்மருக்கு துளசிமாலை சாற்றி, பானகம் நெய்வேத்தியம் செய்து, நெய்விளக்கேற்றி திருவாராதனை செய்யப்பட்டது. சத்திய நாராயண பூஜையும், ஹோமங்களும் நடந்தன. லட்சுமி நாராயண வேணுகோபால சுவாமி கோயில் கொங்கிலாச்சான் அப்பன்னாச்சாரி சுவாமிகள் இவ்வைபவம் தொடர்ந்து நடத்துவது குறித்து விளக்கி பேசினார். மூலவர் ஸ்ரீ ராதாகிருஷ்ணரும், உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி கஸ்தூரி ரங்கநாதரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.