உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெய்வேலியில் காஞ்சி மகா பெரியவர் ஜெயந்தி விழா

நெய்வேலியில் காஞ்சி மகா பெரியவர் ஜெயந்தி விழா

நெய்வேலி: நெய்வேலியில் நடந்த காஞ்சி மகா பெரியவர் ஜெயந்தி விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நெய்வேலி ஆர்ச் கேட் அருகில் காந்தி நகரில் அமைந்துள்ள காஞ்சி காமகோடி சங்கர மடத்தின், சப்த விநாயகர், மஹா பெரியவா கோவிலில், சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், 133 வது ஜெயந்தி விழா நடைபெற்றது. நேற்று காலை சங்கல்பம், கலச ஸ்தாபனம் கணபதி ஹோமம், ஆவஹந்தி ஹோமம் ஜப பாராயணத்துடன் சிறப்பு பூஜைகள் துவங்கியது. அதனை தொடர்ந்து காஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் சிறப்பு ஆரத்தி நிறைவு பெற்று பிரசாத வினியோகம் நடைபெற்றது. நிகழ்ச்சிகளை சப்த விநாயகர் டிரஸ்டியினர் ஏற்பாடு செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !