ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சி
ADDED :126 days ago
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாக திருவிழா மே 21ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக 29ல் தேரோட்டம் நடந்தது.
10ம் நாள் நிகழ்ச்சியான நேற்று தீர்த்தவாரி நடந்தது.
சுவாமி மற்றும் அம்மன் மண்டபத்தில் எழுந்தருளினர். மாலை அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.