உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேஷ வாகனத்தில் எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் அருள்பாலிப்பு

சேஷ வாகனத்தில் எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் அருள்பாலிப்பு

பரமக்குடி;  பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி வசந்த விழாவில் சேஷ வாகனத்தில் பெருமாள் அருள் பாலித்தார்.

கோயிலில் வசந்தோத்ஸவ விழா நடக்கும் நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் வைகை ஆற்றில் இறங்கினார். பின்னர் குதிரை வாகனத்தில் நாள் முழுவதும் வலம் வந்தார். நேற்று மாலை 7:00 மணிக்கு பெருமாள் பரமபத நாதனாக சேஷ வாகனத்தில் அமர்ந்தார். பின்னர் வண்டியூரில் இருந்து புறப்படாகி வைகை ஆற்றில் மண்டூக மகரிஷிக்கு காட்சி தந்தார். தொடர்ந்து இரவு தசாவதார சேவையில் பெருமாள் அருள் பாலித்தார். ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபை நிர்வாகிகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !