ஆடி அரக்கன்
ADDED :122 days ago
ஆடி என்ற அரக்கன் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல அரிய வரங்களைப் பெற்றான். நினைத்த வடிவத்தைப் பெறும் ஆற்றல் இவனுக்கு இருந்தது. ஒருமுறை இவன் விளையாட்டாக சிவபெருமானை ஏமாற்ற விரும்பினான். எனவே பார்வதியின் வடிவெடுத்து சிவனை நெருங்கினான்.
இதனை அறிந்த சிவன் அவனை நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார். அவனது நோக்கம் சிவனை அடைய வேண்டும் என்பதை அறிந்த பார்வதி அரக்கன் மீது இரக்கம் கொண்டாள். அவன் நினைவாக ஒரு மாதத்திற்கு ‘ஆடி’ எனப் பெயரிட்டு சிறப்பு வழிபாடு நடத்தும் வழக்கத்தையும் ஏற்படுத்தி வைத்தனர்.