உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  நல்லுார் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் முருகருக்கு பாலாபிஷேகம்

 நல்லுார் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் முருகருக்கு பாலாபிஷேகம்

 நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், அறுபதாவது வார கந்தசஷ்டி பாராயணம் நடந்தது. திருப்பூர் தொழில் முன்னேற்றத்துக்காகவும், உலக மக்கள் நலன் வேண்டியும் பாலாபிேஷகம் நடந்தது. நல்லுார் விநாயகர் கோவிலில் இருந்து, பக்தர்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக, விஸ்வேஸ்வரர் கோவிலை அடைந்தனர். முருகப் பெருமானுக்கு, 108 பால்குட அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரபூஜையை தொடர்ந்து, கந்த சஷ்டி பாராயணம் நடந்தது. ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர்கள், நிர்வாகிகள் மற்றும் ஸ்ரீபாலமுருகன் கந்தசஷ்டி பாராயண குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !