உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாடுகாணி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

நாடுகாணி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

பொள்ளாச்சி: ஆனைமலை தாலுகா, திவான்சாபுதுார் நாடுகாணி நகரில் உள்ள, வெற்றி விநாயகர், வெற்றிவேல் முருகன், நாடுகாணி அம்மன், நவநாயகர்கள் கோவில் கும்பாபிஷேக விழாவில், நேற்று மூத்த பிள்ளையார் வழிபாடு, தீர்த்த குடங்கள், முளைப்பாலிகை எடுத்து வருதல்; திருவிளக்கு வழிபாடு, முதற்கால வேள்வி வழிபாடு உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இன்று காலை, 6:45 மணிக்கு இரண்டாம் கால வேள்வி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கிறது. காலை, 8:30 மணிக்கு மேல், 9:30 மணிக்குள் திருக்குடங்கள் கோவிலை வலம் வருதல், கும்பாபிஷேக விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !