உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பராசக்தியை பணி மனமே

பராசக்தியை பணி மனமே

ஒரு ஆண்டை அயனம் என்னும் இரண்டு பிரிவாக பிரிப்பர். தை முதல் ஆனி வரை உத்தராயணம் என்றும், ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம் என்றும் சொல்லப்படும். உத்தராயணம் தேவர்களின் பகல் பொழுதாகும். தட்சிணாயன காலம் தேவர்களின் இரவுப் பொழுதாகும். பூலோகத்தில் ஓராண்டு காலம் என்பது வானுலக தேவர்களின் ஒரு நாளாகும்.

ஆடி மாதம் தேவர்களின் மாலை நேர தொடக்கமாக உள்ளது. பகல் முடிந்தும், இருள் சூழும் மாலையில் மயக்கம் உண்டாகி விடும். அதிலிருந்து உலகை காக்கும்படி பராசக்தியை வழிபடுவது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !