உக்கடம் ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் வாராஹி அம்மனுக்கு அபிஷேகம்
ADDED :131 days ago
கோவை ; கோவை உக்கடம் பைபாஸ் சுண்டக்கா முத்தூர் ரோடில் அமைந்துள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் அமைந்துள்ள வாராஹி அம்மனுக்கு வைகாசி மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. இதில் சந்தன காப்புடன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் வாராஹி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர் நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.