கோவை கூப்பிடு விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :1 days ago
கோவை; இடையர் வீதி ஸ்ரீ கூப்பிடு விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வைகாசி மாதம் 21 ஆம் நாள் வியாழக்கிழமை அன்று கும்பாபிஷேகம் நடந்தது. இதன் முதல் நிகழ்வாக செவ்வாய்கிழமை அன்று மாலை முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது இதில் மங்கள இசையுடன் ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது. தொடர்ந்து புதன்கிழமை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் மற்றும் விமான ஸ்தூபிகள் ஸ்தாபனங்கள் நடைபெற்றது மாலை மூன்றாம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடைபெற்ற வியாழக்கிழமை காலை நான்காம் காலையாக சால பூஜைகளை தொடர்ந்து கும்ப கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் மூலவர் விநாயகர் வெள்ளி காப்பு கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் நிறைவாக கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது