உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஹலசூரு ஆர்.பி.ஏ.என்.எம்., மைதானத்தில் திரவுபதி அம்மன் தீமிதி திருவிழா

ஹலசூரு ஆர்.பி.ஏ.என்.எம்., மைதானத்தில் திரவுபதி அம்மன் தீமிதி திருவிழா

சிவாஜி நகர்: திரவுபதி அம்மன் தீ மிதிக்கும் குமர மக்கள் குழு சார்பில் இன்று தீமிதி திருவிழா நடக்கிறது.

சிவாஜி நகர் பழைய மார்க்கெட் சாலையில் உள்ள ஸ்ரீ திரவுபதி அம்மன் தீ மிதிக்கும் குமரமக்கள் குழு மற்றும் ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஸ்ரீ திரவுபதி அம்மன் கோவில் அறக்கட்டளை இணைந்து, 55ம் ஆண்டு தீ மிதி திருவிழா நடத்தி வருகிறது.

விழாவை ஒட்டி, மே 24ல் ஸ்ரீ திரவுபதி அம்மன் திருக்கல்யாண உத்சவமும், ஜூன் 5ல் அலகு நிறுத்தும் விழாவும் நடந்தது. இதில், மகான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடத்தில் இருந்து புறப்பட்ட சக்தி கரகம், பழைய மார்க்கெட் வீதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஸ்ரீ திரவுபதி அம்மன் கோவிலை வந்தடைந்தது.

இன்று மாலை, 6:05 மணிக்கு ஹலசூரு ஆர்.பி.ஏ.என்.எம்., பள்ளி மைதானத்தில் தீ மிதி திருவிழா நடக்கிறது. இந்தாண்டு அக்னி கரகத்தை சரவணன் எடுக்கிறார். நாளை – 8ம் தேதி– வசந்த உத்சவ கரகம், 10ல் சாந்தி அபிஷேகம், அன்னதானம், தர்மராஜா சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. பக்தர்கள் திரளாக பங்கேற்று, அம்மனின் அருளை பெருமாறு கோவில் சார்பில் கேட்டு கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !