பூங்குளம் கோயிலில் வருஷாபிஷேகம்
ADDED :1 days ago
முதுகுளத்துார்: பூங்குளம் பூங்குளத்து அய்யனார், சேதுமாகாளி, சுடலை மாடசாமி, கருப் பணசாமி கோயில் கும்பாபிஷேகம் முடிந்து முதலாம் ஆண்டு வருஷாபிஷேகம் நடந்தது.
கணபதி ஹோமம் துவங்கி யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. அய்யனார், சேதுமாகாளி, சுடலை மாடசாமி, கருப்பணசாமி உட்பட கிராம தெய்வங் களுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட பொருட் களால் அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது.
கிராம மக்கள் பொங்கல் வைத்தும் மாவிளக்கு எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது. முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து பலர் கலந்து கொண்டனர்.