உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மத்திரெட்டிபாளையம் மத்திராலம்மன் கோவில் கும்பாபிஷேகம்

மத்திரெட்டிபாளையம் மத்திராலம்மன் கோவில் கும்பாபிஷேகம்

அன்னூர்; மத்திரெட்டிபாளையம், மத்திராலம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

மத்திரெட்டிபாளையம், மத்திராலம்மன் கோவிலில் புதிதாக பஞ்சலோக விக்ரகம் நிறுவப்பட்டு பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. கும்பாபிஷேக விழா கடந்த, 5ம் தேதி காலை திருவிளக்கு பூஜை உடன் துவங்கியது. கடந்த, 6ம் தேதி எண் வகை மருந்து சாத்துதல், வேள்வி பூஜை நடந்தது. நேற்று காலை 8:15 மணிக்கு மத்திராலம்மன், விநாயகர், மந்த முனீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, தச தரிசனம், தசதானம், மகா தீபாராதனை நடைபெற்றது. அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !