உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் ஏக தின லட்சார்ச்சனை

புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் ஏக தின லட்சார்ச்சனை

 புவனகிரி: புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் நடந்த ஏக தின லட்சார்ச்சனையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

புவனகிரியில் மகான் ராகவேந்திரர் அவதார இல்லம் கோவிலாக நிர்மாணிக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் மற்றும் விழாக்கள் நடந்து வருகிறது. மேலும் ஆண்டு தோறும் ஏக தின லட்சார்ச்சனை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான விழா நேற்று 7ம் தேதி காலை 5:00 மணிக்கு சுப்ரபாதத்துடன் ஸ்தோத்திர பாராயணம், நிர்மல்ய அபிேஷகத்துடன் துவங்கியது.தொடர்ந்து பல்வேறு நறுமண திரவியங்கள் மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிேஷகம் நடத்தினர். காலை 6:00 மணியில் இருந்து பகல் 1:00 மணி வரை லட்சார்ச்சனையும், தொடர்ந்து மஹா தீபாரதனையும் நடந்தது. ஏற்பாடுகளை மகான் ராகவேந்திரர் சுவாமிகள் புனிதத்தொண்டு அறக்கட்டளை நிர்வாகத்தின் கவுரவத் தலைவர் சுவாமிநாதன், தலைவர் கயிலை ராமநாதன் , டாக்டர் உதயசூரியன், பொருளாளர் கதிர்வேல் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர். பூஜைகளை ரமேஷ் தலைமையிலான ஆச்சாரியர்கள் செய்திருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !