உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துக்குமாரசாமி கோவில் கும்பாபிஷேக விழா

முத்துக்குமாரசாமி கோவில் கும்பாபிஷேக விழா

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த டி. புதுப்பாளையத்தில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமார சுவாமி, பொய்யா விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

கும்பாபிஷேக விழா, கடந்த 5ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று காலை 6:00 மணிக்கு 4ம் கால யாகசாலை பூஜை முடிந்து, 7:00 மணிக்கு கடம் புறப்பாடாகி பொய்யா விநாயகர் கோவிலிலும்; தொடர்ந்து 8:00 மணிக்கு முத்துக்குமார சுவாமி கோவில் கலசத்திற்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. மாலையில் வள்ளி, தேவசேனா சமேத முத்துக்குமார சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

விழாவில், டி.புதுப்பாளையம், தென்பேர், சின்னத்தச்சூர் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் இளைஞர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !