விழுப்புரம் வேணுகோபால் சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :3 hours ago
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த வ.பாளையம் ஸ்ரீ பாமா ருக்மணி தாயார் சமேத வேணுகோபால் சுவாமி கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
இதனையொட்டி நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு மூலவர், உற்சவர் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தாயார்களுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்த நிலையில், மகா தீபாராதனை நடந்தது.
மாலை 6:00 மணிக்கு, உற்சவர் ஸ்ரீபாமா ஸ்ரீருக்மணி சமேத பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு உற்சவர்பாமா ருக்மணி தாயாருடன் பெருமாள் வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.